புதுப்பெண்  உடல்கருகி சாவு:  கணவரே எரித்துக் கொன்றாரா?

 

மாவட்ட செய்தி: நெல்லை:

 நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தை சேர்ந்த நாகராஜுக்கும், குற்றாலம் ஐந்தருவி ரோட்டில் படகு குழாம் பகுதியிர்ல  வசித்து வரும் ஆறுமுகம் மகள் சொர்ணத்திற்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சொர்ணம் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். சில நாட்களாக சொர்ணம்  குற்றாலத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார் வடுமுறை நாட்களில்  நாகராஜ் வந்து தன்னுடைய மனைவியை பார்த்து செல்வார்.
சம்பவத்தன்று நாகராஜ் தனது மனைவியை பார்க்க குற்றாலத்துக்கு  வந்து மனைவியுடன் தங்கினார். சொர்ணத்தின் பெற்றோர் வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில்  நாகராஜும்  வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.13617482_1034257426656510_582676159_n

இந்த நிலையில்  சொர்ணம் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர்  ஒருவர் மதிய வேளையில்  சொர்ணத்தை பார்க்க வந்தார். வீடு வெளிப்பக்கமாக தாழிடப்பட்டு  இருந்ததை பார்த்து, . கதவை தட்டி  சொர்ணத்தை பல முறை கூப்பிட்டார்.

வீட்டுக்குள் இருந்து சத்தம் எதுவும் வராததால் கதவை திறந்து கொண்டு அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பாதி உடல் எரிந்து கருகிய நிலையில் சொர்ணம் பிணமாக கிடந்ததை  பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும்  ஓடி வந்து பார்த்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  குற்றாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த சொர்ணத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  . சொர்ணம் நாகராஜால் அடித்து, உதைத்து எரித் துக் கொல்லப்பட்டாரா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.