அடுத்தடுத்து கணவன்-மனைவி தற்கொலை .. அனாதையான ஒரு வயது பிஞ்சு..

த்திரபிரதேசம், கான்பூரை சேர்ந்தவர்கள் பிரின்ஸ் மற்றும் சந்திரிகா. இருவரும் காதலர்கள். பெற்றோர் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் வீட்டை விட்டு வந்து திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் பிரின்சுடன் அவர்கள் வீட்டார் யாரும் தொடர்பில் இல்லை. பிரின்ஸ் மருந்துக்கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது இந்த கொரோனா ஊரடங்கினால் வேலைக்கு போக முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் பிரின்ஸ். கையில் குடும்பச்செலவுக்கு பணம் ஏதும் இல்லாத காரணத்திற்காக தம்பதியினருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதே போல நேற்றும் வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரின்ஸ் ஓடிச்சென்று தனது அறையின் கதவை மூடிக்கொண்டுள்ளார். அறைக்குள் சென்றவர் வெளியே வர தாமதமானதால் சந்தேகித்த மனைவி ஜன்னலை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார். அங்கே பிரின்ஸ் தனது மனைவியின் சேலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்து அலறி அடித்து சொந்தக்கார்களுக்கு போன் செய்து விசயத்தைச் சொன்ன சந்திரிகா, தானும் இன்னொரு அறைக்குள் சென்று தற்கொலை செய்து கொண்டார்.

உறவினர்கள் நேரில் வந்து பார்த்து போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளனர்.. போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெற்றோர் இருவரும் ஆத்திரத்தில் அவசரப்பட்டு தங்களை மாய்த்துக்கொள்ள ஏதுமறியாத ஒரு வயது பிஞ்சு இன்று அனாதையாகி நிற்கிறது.

– லெட்சுமி பிரியா