ஐதராபாத் : தாய் நாயின் கண் முன்னே 4 நாய்க்குட்டிகள் எரித்துக் கொலை

தராபாத்

தாய் நாயின் முன்பு அதன் 4 குட்டிகள் எரித்துக் கொன்ற சம்பவத்தில் வழக்கு பதியப் பட்டுள்ளது.

                                                        மாதிரி புகைப்படம்

கடந்த 2016 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நாய்க்குட்டிகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. காவல்துறையினர் அவர்களை கைது செய்து நடவடிககி எடுத்தனர். அதே போல் 2017 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சென்னையில் மாடியில் இருந்து நாயை தூக்கி எறிந்தனர். இந்த இரு சம்பவங்களிலும் நிகழ்வை வீடியோ பதிவாக்கி பகிர்ந்து அந்த கொடூர செயலை செய்தவர்கள் மகிழ்ந்துள்ளனர்.

தற்போது இதே பாணியில் ஐதராபத் நகரில் ஒரு தாய் நாயின் கண் முன்பு அதன் 4 குட்டிகளும் எரித்துக் கொல்லப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் இந்த கொடூரத்தை செய்தவர்கள் குறித்து எவ்வித விவரமும் வெளி வரவில்லை. குட்டிகளை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் தாய் நாய் கண்ணீர் விட்டு ஊளையிடுவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.

இந்த கொடூர செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு பலரும் தகவல் அனுப்பி உள்ளனர். இது குறித்து தகவலறிந்த ஆவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிந்து அவர்கள் யாரென விசாரித்து வருகிறது.

அந்த வீடியோவில் உள்ள காட்சிகளைக் கொண்டு அந்த சம்பவம் எங்கு நடந்திருக்கக் கூடும் என்பதை கண்டறிந்த காவல்துறையினர் அந்த பகுதிகளில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.