முகஅடையாள தொழில்நுட்பச் சோதனை: ஹைதராபாத் விமானநிலையத்தில்

--

ன்றையக் காலக்கட்டத்தில் முகஅடையாள தொழில்நுட்பம் எல்லாம் செல்பேசியிலும் இயல்பாகவே உள்ள இந்தச் சூழ்நிலையில் விமானநிலையங்களில் முகஅடையாளத்தை பயன்படுத்தி விமான நிலையத்தில் உள்நுழையும் வசதி முதன்முதலில்  ஹைதராபாத் விமானநிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

2018க்கே விமானப் போக்குவரத்து அமைச்சகம்  முகஅடையாளத்தை பயன்படுத்தி விமான நிலையத்தில் உள்நுழையும் வசதியை சோதித்தது. அதன்பின்னர் டிசம்பர் 2018ல் உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் டிஜி யாத்ராவினை அறிமுகப்படுத்தியது.

இதன் மூலம்  விமானநிலையங்களில் உள்நுழைய காகித வடிவில் எந்த அடையா ஆவணத்தினையும் காட்டவேண்டியதில்லை. மாறாக டிஜி யாத்ரா செயலியில் காட்டினாலேயே போதுமானது, இந்த நுட்பமும் தற்போது ஹைதராபாத் விமானநிலையத்தில் பரிசோதனையில் உள்ளது

விமானநிலையங்களில் உள்நுழையும்போது பாதுகாப்பு நுழைவாயில்களில் முகஅடையாளத்தைக்கொண்டு உள்நுழையும்வ வசதியை விமானநிலையத்தில் உள்நுழையவும், விமானங்களில் ஏறவும் பயன்படுத்தப்பட உள்ளது. அது மட்டுமல்லாமல் நம்முடைய பொருட்களை எடுக்கும்போதும் இந்த முகஅடையாளத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. நாட்டிலயே முதல்முறையாக பெங்களுரு மற்றும்  ஹைதராபாத் விமானநிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் வெற்றியைப் பொறுத்து அடுத்தக்கட்டமாக கொல்கட்டா, புனே,வாரணாசி மற்றும் விஜயவாடாவில் இந்த முக அடையாளத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

லண்டனில் விரைவு நுழைவு வாயில் இந்த முகஅடையாளத்தொழில்நுட்ப வசதியைக்கொண்டு சுயமாகவே உள்நுழையலாம். அமெரிக்காவிலும் 2021 முக்கியமான 20 விமான நிலையிங்களில் 100% வெளிநாட்டு பயணிகள் இந்த வசதியை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு சோதனை, உள்நுழைவு சோதனை என எல்லாவிடங்களிலும் நாம் நீண்ட வரிசையில் , நீண்ட நேரமாக காத்திருக்கவேண்டிய அவசியம் இருக்காது..
எல்லாம் சரி

சென்னை விமானநிலையத்தில் இம்முறை எப்போது அறிமுகப்படுத்தப்படும்

செல்வமுரளி