பெங்களூருவை 5 விக்கெட்டுகளில் வென்ற ஐதராபாத்!

ஷார்ஜா: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஐதராபாத் அணி.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களே எடுத்தது.

மிக எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியில் விருத்திமான் சஹா 32 பந்துகளில் 39 ரன்களையும், மணிஷ் பாண்டே 19 பந்துகளில் 26 ரன்களையும் எடுத்தனர்.

ஜேசன் ஹோல்டர் 10 பந்துகளில் 26 ரன்களை அடித்தார். கேன் வில்லியம்சன் அடித்தது 8 ரன்கள் மட்டுமே. இறுதியில் 14.1 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஐதராபாத் அணி.