லாகோஸ்:

கிளிமஞ்சாரோவில் ஐதராபாத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஏறி சாதனை படைத்துள்ளான்.

ஆப்பிரிக்காவின் தான்சானியா கிளிமஞ்சாரோ மிக உயர்ந்த சிகரமாகும். கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 895 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த சிகரத்திற்கு பல நாடுகளில் இருந்தும் மலையேற்றக் குழுவினர் வருகை தருகின்றனர்.

இந்த வகையில் ஐதராபாத்தில் ஒரு குழு கிளிமஞ்சாரோ மலையேற்றத்துக்குச் சென்றது. இந்த குழுவில் 7 வயது சிறுவன் சமன்யு போத்துராஜூ இடம்பெற்றான். இவன் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளான்.

தாய், பயிற்சியாளருடன் சமன்யு மலை ஏற தொடங்கினான். இடையில் தாய்க்கு உடல்நிலை பாதித்து பாதியிலேயே திரும்பிவிட்டார். எனினும் சமன்யு குழுவினருடன் தொடர்ந்து மலையேறி ஏப்ரல் 2ம் தேதி உகுரு என்ற கிளிமஞ்சாரோ சிகரத்தை அடைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.