டாஸ் வென்ற ஐதராபாத் பெளலிங் தேர்வு – பெங்களூரு பேட்டிங்!

சென்னை: ஐதராபாத் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், டாஸ் தோற்ற பெங்களூரு அணி, முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பெளலிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி கோலியின் பெங்களூரு அணி களமிறங்கியுள்ளது. துவக்கத்திலேயே தேவ்தத் படிக்கல்லின் விக்கெட்டை அந்த அணி இழந்துள்ளது.

ஐதராபாத் அணியில், இந்தப் போட்டியிலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தப் போட்டியில், கொல்கத்தாவிற்கு எதிராக, ஐதராபாத் தோற்றபோதே, அணியில் வில்லியம்சனை எடுக்காதது குறித்து விமர்சனம் கிளம்பியது. இந்நிலையில், இந்தப் போட்டியிலும், சிறந்த நடுகள வீரரான வில்லியம்சன் தவிர்க்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு அணி, மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால், ஐதராபாத் அணி, தனது முதல் போட்டியில் தோல்வியடைந்தது.