ஐதராபாத் : கழிவு நீரில் அமர்ந்து போராட்டம் நடத்திய கவுன்சிலர்

--

தராபாத்

தராபாத் நகரில் ஒரு ஆளும் கட்சி மாநகாராட்சி உறுப்பினர் வழிந்து ஓடும் கழிவு நீரில் அமர்ந்து போராட்டம் நடத்தி உள்ளார்.

ஐதராபாத் நகரில் உள்ள பத்மாலயா காலனி, மைதிரிவனம் மற்றும் மைதிரிகுடிர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கப்படவில்லை.    இதனால் ஆங்காங்கே கழிவு நீர் சேமிப்பு டாங்குகள் நிரம்பி வழிகின்றன.  இதனால் சாலைகளில் கழிவு நீர் தேங்கி மக்கள் அவதியுறுகின்றனர்.   இது குறித்து ஐதராபாத் நகராட்சியிடம் பலமுறை மக்கள் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

அந்தப் பகுதியின் மாநகராட்சி உறுப்பினர் திருமலா ரெட்டி ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்தவர் ஆவார்.   இவரும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுள்ளார்.   ஆயினும் எதுவும்நடைபெறவில்லை.   இதனால் அவர் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்தப் பகுதியில் வெள்ளமாக ஓடும் கழிவு நீரில் அமர்ந்து திருமலா ரெட்டி போராட்டம் நடத்தத் தொடங்கி உள்ளார்.   இதைக் கண்ட மக்கள் அவருடன் சேர்ந்துக் கொண்டனர்.  அவர் அந்த கழிவுநீரில் அமர்ந்து கிட்டத்தட்ட 3 முதல் 4 மணி வரை போராட்டம் நடத்தி உள்ளார்.   அதை ஒட்டி மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.

அதிகாரிகள் இது குறித்து திட்டம் தயாராக உள்ளதாகவும் அதற்கான திட்ட வரைவுகள் அந்த பகுதி மாநகராட்சி ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.   விரைவில் இந்த திட்டத்துக்கு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்ற பின்பு பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.