ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமையாக்க வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்… ஐதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடி

 
ஐதராபாத்: தெலங்கானாவில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்த அமைப்புக்கு உயர்நீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மறைந்த பிறகு தெலங்கானா மாநிலத்தில் உள்ள அவரது சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்று கரீப் இன்டர்நேஷனல் சொசைட்டி சார்பில் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படடது. திராட்சை தோட்டம், விவசாய நிலம், வணிக வளாகம் என இந்த சொத்துக்களின் மதிப்பு 14.5 கோடி ரூபாயாகும். இந்த பொது நல மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், பொது நல மனு இல்லை, விளம்பர நல மனு என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த மனுவை தாக்கல் செய்த அமைப்புக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த அபராதத்தை மாநில அரசு வசூல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.
 
 
Hyderabad High court Fines man who wanted Jayalalitha’s properties to be nationalised. court has ruled that its a sensational case and filed to gain publicity.