வாடகைத்தாய் விவகாரம் : ஐதராபாத் உயர்நீதிமன்ற உத்தரவு !

தராபாத்

தராபாத் உயர்நீதி மன்றம், வாடகைத்தாயார்களுக்கு பிறந்த குழந்தைகளை யாருக்கும் தரக்கூடாது என  உத்தரவிட்டுள்ளது.

ஐதராபாத் நகரில் உள்ளது கிரண் கருத்தரிப்பு மையம்.  இங்கு குழந்தையற்றோருக்கு வாடகைத்தாயார்கள் மூலமாக குழந்தைகள் பெற்றுத் தருவதாக தெலுங்கானா மாநில மகளிர் நல நிறுவனத்திடம் இருந்து மாவட்ட சுகாதார அதிகாரிக்கும், காவல் துறைக்கும் புகார் தரப்பட்டது. மையத்தை சோதனை இட்டதில் 48 வாடகைத் தாயார்கள் சிக்கினர்.

ஆனால் அவர்கள் மையத்தை விட்டு வெளியேற மறுத்ததால், உயர்நீதி மன்றம் அளித்த உத்தரவின்படி அவர்களை அந்த மையத்தின் இரண்டாவது, மற்றும் மூன்றாவது மாடியில் உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  அங்கு அவர்களுக்கு உணவு, மருத்துவம், மாதச் செலவுக்கு ரூ. 10000 ஆகியவை கருத்தரிப்பு மையத்தினால் வழங்கப்படுகிறது.

இந்தப் பெண்கள் புரோக்கர்கள் மூலம் மையத்துக்கு அறிமுகம் ஆனவர்கள்.  புரோக்கர்கள் ஒருவருக்கு ரூ. 15லிருந்து ரூ.30 லட்சம் வரை வாங்கிக்கொண்டு இந்த பெண்களுக்கு வெறும் 3 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர்.  இந்தப் பெண்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் இதை ஒத்துக் கொண்டதாக தெரிகிறது.  வருமையில் வாடும் இந்தப் பெண்களுக்கு இது தங்களின் வாழ்க்கைக்கு தேவை என கூறி இருக்கின்றனர்.

தற்போது உயர்நீதி மன்றம் இந்தப் பெண்களுக்கு பிறந்துள்ள குழந்தைகளை தங்கள் மறு உத்தரவு வரும் வரை யாருக்கும் தரக்கூடாது என தெலுங்கான அரசுக்கும், கிரன் கருத்தரிப்பு மையத்துக்கும் ஆணை இட்டுள்ளது.