Random image

ஐதராபாத் ஆணவக்கொலை: கொலை குற்றவாளி பீகாரில் கைது

பாட்னா:

தெலங்கானாவில் ஆணவக்கொலையை செய்த கூலிப்படையை சேர்ந்த கொலைகாரன் பீகாரில் கைது செய்யப்பட்டார்.

தெலங்கானா மாநிலம் மிர்யாபூர் நகரை சேர்ந்தவர் பிரனே குமார். தலித் சமுகத்தை சேர்ந்த இவர்  ஜாதியை சேர்ந்த  அம்ருத்தா வர்ஷினி என்ற பெண்ணை, அவரது பெற்றோர்களின் எதிர்ப்புபை மீறி  கடந்த ஜனவரி  மாதம் திருமணம் செய்துக் கொண்டார்.

பிரேன குமார் – அம்ருத்தா

இதையடுத்து அம்ருத்தாவின் பெற்றோர் தலித் சமுகத்தை சேர்ந்த பிரனே குமார் என்பவரை ஆணவக்கொலை செய்ய கூலிப்பபடையை ஏற்பாடு செய்தனர். கூலிப்படையை சேர்ந்தவர் பிரனே குமாரை கொலை செய்து விட்டு தப்பிச்சென்றான். அப்போது அவனை காவல்துறையினர் பீகாரில் கைது செய்துள்ளனர்.

கடந்த வார வெள்ளிக்கிழமையன்று  (செப்டம்பர் 14) பிரனே அம்ருதா தம்பதியினர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றனர். அம்ருத்தா  5 மாத கர்ப்பிணியாக உள்ளது. மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துக் கொன்டிருந்த அவர்களை பின் தொடர்ந்து வந்த  நபர், பிரனேவை பின்னாலில் இருந்து கத்தியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் மருத்துவமனையில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ  சமூக வலைத்தளங்களில் வைரலானது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தனது கணவரை கொலை செய்ய, தந்தை மாருதி ராவ் 10 லட்சம் ரூபாய் கொடுத்தாக, அம்ருத்தா போலீஸாரிடம் கூறியிருந்தார்.  இது தொடர்பாக போலீஸார் ‘ஆணவக் கொலை’ என வழக்கு பதிவு செய்து அம்ருத்தாவின் தந்தை மாருதி ராவ், அவர் சகோதரர் ஷர்வன்  மற்றும் நண்பர் கரீமை ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

போலீஸாரின் விசாரணையில், கொலைகாரன் பிகாரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. பின்பு, பிகார் போலீஸ் உதவியுடன் தெலங்கானா போலீஸார் கொலைகாரனை கடந்த 4 நாட்களாக  தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், பிகார் மாநிலம் சம்மஸ்திபூர் மாவட்டத்தில், கொலைகாரனை கைது செய்த போலீஸார் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.