அதிரடியை காட்டத் தவறிய பேட்ஸ்மென்கள் – 10 ரன்களில் வீழ்ந்த ஐதராபாத்!

சென்ன‍ை: கொல்கத்தா அணிக்கெதிரான முதல் லீக் போட்டியில், 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஐதராபாத் அணி.

188 ரன்கள் என்ற ரன்னை விரட்டிய அந்த அணிக்கு, யாரும் அதிரடியாக ஆடி கைகொடுக்கவில்லை. மணிஷ் பாண்டே(61) மற்றும் பேர்ஸ்டோ(55) அரைசதங்கள் அடித்தாலும், அவ‍ை தேவையான அளவிற்கு அதிரடியாக அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் சமது 8 பந்துகளில் 19 ரன்களை அடித்து, கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினாலும் பயனில்லை. மணிஷ் பாண்டே, இறுதிவரை நாட்அவுட்டாக களத்தில் நின்றும், ஆட்டத்தை அவரால் பினிஷ் செய்ய முடியவில்லை.

இரு அணிகளிலும், தலா 2 அரைசதங்கள் அடிக்கப்பட்டாலும், கொல்கத்தாவின் அரைசதங்கள் அதிக அதிரடியானவை. இறுதியில், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்து, 10 ரன்களில் தோற்றது ஐதராபாத்.

ஐதராபாத் அணி, விக்கெட்டை தக்கவைக்க வ‍ேண்டுமென்பதில் செலுத்திய கவனத்தை, ரன்ரேட் விகிதத்திலும் செலுத்தியிருக்கலாம் என்று விமர்சிக்கப்படுகிறது.