துபாய்: வெற்றிக்குத் தேவை 164 ரன்கள் என்று பயணித்த ஐதராபாத் அணி, 153 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 6 ரன்களில் ரன்அவுட்டாக, மற்றொரு துவக்க வீரர் பேர்ஸ்டோ 43 பந்துகளில் 61 ரன்களை அடித்து நம்பிக்கையளித்தார்.

மணிஷ் பாண்டே 34 ரன்களை எடுக்க, பிரியம் கார்கின் பங்கு 12 ரன்கள் மட்டுமே. சந்தீப் ஷர்மா 9 ரன்கள் அடித்தார். கூடுதலாக கிடைத்த ரன்கள் மட்டும் 15 என்பதை கவனிக்க வ‍ேண்டும்.

இறுதியில், 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 153 ரன்கள் மட்டுமே எடுத்த ஐதராபாத் அணி, 10 ரன்களில் தோற்றது.

பெங்களூரு அணி தரப்பில் யஸ்வேந்திர சஹல் 3 விக்கெட்டுகளையும், ஷிவம் துவே, நவ்தீப் சைனி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.