ஷார்ஜா: ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில், 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களைக் குவித்தது.
கேப்டன் ரோகித் ஷர்மா 6 ரன்களை மட்டுமே அடிக்க, குவின்டன் டி காக் 39 பந்துகளில் 4 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 67 ரன்களை விளாசினார்.
இஷான் கான் 31 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 27 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்களையும், கிரண் பொல்லார்டு 25 ரன்களையும், குருணல் பாண்ட்யா 4 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களையும் அடித்தனர்.
இதனையடுத்து, 20 ஓவர்களில் அந்த 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை அடித்தது.
பின்னர் சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு, கேப்டன் வார்னர் 44 பந்துகளில் 60 ரன்கள் அடித்து உதவினார். பேர்ஸ்டோ 25 ரன்களும், மணிஷ் பாண்டே 30 ரன்களும், அப்துல் சமது 20 ரன்களும் அடித்தனர்.
வேறு யாரும் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தால், 20 ஓவர்களில், அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை மட்டுமே அடித்தது.
மும்பை அணியின் பெளல்ட், பேட்டிசன் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பும்ரா அதிகபட்சமாக 41 ரன்களை விட்டுக்கொடுத்தார்.