70 பந்துகளில் 123 ரன்கள் தேவை – வெல்லுமா ஐதராபாத் அணி?

சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில், சவாலான இலக்கை விரட்டிவரும் ஐதராபாத் அணி, திணறி வருகிறது.

அந்த அணியின் துவக்க வீரர்கள் விரித்திமான் சஹா 7 ரன்களிலும், கேப்டன் வார்னர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். குறைந்த ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்த அந்த அணிக்கு நெருக்கடி ஏற்படவே, மணிஷ் பாண்டேவும், ஜோனி பேர்ஸ்டோவும் நிலைத்து நின்று ஓரளவு ஆடி வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் பெரிய அதிரடி ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை. இப்போதைய நிலையில், ஐதராபாத் அணி, ரன்ரேட்டை சரிகட்ட வேண்டுமென்றால், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

அந்த அணி, இப்போட்டியில் வெல்ல வேண்டுமெனில், 70 பந்துகளில் 123 ரன்களை எடுக்க வ‍ேண்டுமென்ற நெருக்கடி நிலவுகிறது.