ஐதராபாத் அருங்காட்சியகத்தில் 4 கிலோ தங்க டிபன் பாக்ஸை திருடிய 2 பேர் கைது
ஐதராபாத்:
ஐதராபாத் அருங்காட்சியகத்தில் நிஜாமின் விலை மதிப்பற்ற கற்கள் பதித்த 4 கிலோ தங்க டிபன் பாக்ஸ், நவரத்தின குவளை,கிண்ணம், தங்க கரண்டி உள்ளிட்ட பொருட்கள் மாயமானது.
அருங்காட்சியக கண்ணாடி ஜன்னலை உடைத்துக் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். சிசிடிவி கேமரா பதிவில் சிக்காமல் மிக சாமர்த்தியமாக திருடியுள்ளனர்.. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் கவுஸ் பாஷா (வயது 23), முகமது முபின் (வயது 24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அருஙகாட்சியகத்தில் இருந்து தங்கத்தால் ஆன உறையுடன் கூடிய குரான் புத்தகத்தையும் திருடிச் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் திருடியபோது அருகில் இருந்த பள்ளிவாசலில் இருந்து பாங்கு ஓதும் சத்தம் கேட்டதால் மனதை மாற்றிக் கொண்டு திரு£மல் சென்றுவிட்டனர்.
மும்பையில் அவர்களால் விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை. இந்நிலையில் தான் போலீஸ் அவர்களை கைது செய்துள்ளது. அருங்காட்சியகத்தில் இருந்த ஒரு சிசிடிவி கேரமாவில் மட்டும் இருவரும் சிக்கியிருந்தனர். திருடப்பட்ட பொருட்களின் துபாய் மதிப்பு ரூ. 30 கோடிக்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.