ஹைதராபாத்தில் கள்ள நோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

fake_currency

சுமார் ரூ.9 லட்சம் மதிப்புள்ள 1,000 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் , ஒரு இருசக்கர வாகனம் மற்றும் மூன்று மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து முகமது அக்யூல்(26), கியாஸ் முகைதீன் (26) மற்றும் டாஃபீக் அகமது ஆகிய மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.
இதில் முகமது அக்யூலுக்கு அவரது தாய்மாமனான முகமது யாசின் என்பவர் மூலம் இந்த கள்ள நோட்டுகள் கிடைத்ததாக தெரிகிறது. யாசின் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் வசிப்பவர். இருவரும் துபாயில் சந்தித்தபோது இந்த 9 லட்சம் மதிப்புள்ள இந்திய கள்ள நோட்டுகளை யாசினிடமிருந்து அக்யூல் பெற்றுக்கொண்டு இந்தியா வந்திருக்கிறார். துபாயில் இருந்து 9 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களை விமான நிலைய அதிகாரிகளின் கண்களுக்கு அகப்படாமல் இலாவகமாக கொண்டுவந்திருக்கிறார் அக்யூல். இதில் அவருக்கு கிடைத்த பங்கு ரூ.3 லட்சம் ஆகும்.
இப்பணத்தை கியாஸ் முகைதீன் மற்றும் மற்றும் டாஃபீக் அகமது ஆகியோர் மூலம் மாற்ற முயன்றபோது போலீசார் இவர்களை கைது செய்திருக்கிறார்கள். இப்போது இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.