தொடரும் ஐபிஎல் சூதாட்டம் : ஹைதராபாத்தில் 3 பேர் கைது

 
ஐபில்  கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஹைதராபாத் நகரில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் பத்தாவது  சீசன்  கிரிக்கெட் போட்டிகள் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்திய கிரிக்கெட் அணி மட்டுமின்றி பல்வேறு சர்வதேச அணிகளைச் சேர்ந்த வீரர்களும், உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வருகின்றனர

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை போன்று மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடராக இருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ஹைதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து விசாராணை மேற்கொண்ட போலீசார் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.75,000 பணம், லேப்டாப் மற்றும் மூன்று மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் துவங்கிய சில தினங்களில் சூதாட்ட புகாரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.