ஐபிஎல்: போராடி வென்ற ஹைதராபாத் அணி

Hyderabad seal thrilling win

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் ஹைதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.

 

ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்மாக‌ கேப்டன் வார்னர் ஆட்டமிழக்காமல் 7‌0 ரன்களும், நமன் ஓஜா 34 ரன்களும் குவித்தனர். அக்ஷர் படேல், மோகித் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

160 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியில் ஆம்லா, மேக்ஸ்வெல், மோர்கன், மில்லர், சாஹா, அக்ஷர் படேல் ஆகிய முக்கிய வீரர்கள் குறுகிய இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு முனையில் நிலைத்து நின்று வேகமாக ரன்கள் சேர்த்த மனன் வோரா 50 பந்துகளில் 95 விளாசி ஆட்டமிழந்தார். இருப்பினும் அவரது சிறப்பான ஆட்டம் வீணானது. பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

Leave a Reply

Your email address will not be published.

You may have missed