திஷா’ படப்பிடிப்பிற்கு தயாராகிறார் ராம் கோபால் வர்மா…!

நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் படமாக தயாரிக்கப்படுகிறது .

‘திஷா’ என்று தலைப்பிடப்பட்ட இந்த படத்தை ராம் கோபால் வர்மா இயக்கப்போவதாக தெரிவித்துள்ளார் .

இதற்காக ராம் கோபால் வர்மா காவல்துறையினரைச் சந்தித்து இந்த சம்பவம் பற்றிய தகவல்களை சேகரித்ததாக தகவல் வந்துள்ளது.

இந்த நிலையில் ராம் கோபால் வர்மா, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், இரண்டு பதிவுகளை பகிர்ந்துள்ளார். முதல் பதிவில், ஒரு பெண்ணின் கை மட்டும் தெரிவது போல் உள்ளது.

இரண்டாவது பதிவில் பிரியங்கா ரெட்டியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி சென்னா கேசவ்லுவின் மனைவி ரேணுகாவை தற்போது தான் சந்தித்தேன் என பதிவிட்டுள்ளார் . மேலும் அவன் இந்த பெண்ணை 16 வயதில் திருமணம் செய்திருக்கிறான், இப்போது தனது 17வது வயதில் பிரசவிக்கப் போகிறாள். திஷா மட்டுமல்ல, அந்த கொடூரன் தனது சொந்த மனைவியையும் பலியாக்கி இருக்கிறான். ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் குழந்தை இவள். இருவருக்குமே எதிர்காலம் இல்லை” என்று தெரிவித்துள்ளார் .