சர்வீஸ் சார்ஜ் வாங்கிய ஓட்டலுக்கு அபராதம்

தராபாத்

ஹ்ரி 100 டிகிரி ரெஸ்டாரெண்ட் என்னும் ஐதராபாத் ஓட்டலுக்கு சேவைக்கட்டணம் (Service Charge) வசூலித்ததால் ரூ 5000 அபராதம் விதித்து மாவட்ட கன்ஸ்யூமர் ஃபோரம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஐதராபாதை சேர்ந்த ஊழல் எதிர்ப்பு ஆர்வலர் விஜய் கோபால்.  இவர் கடந்த வருடம் நகரின் புகழ்பெற்ற ஓட்டல்களில் ஒன்றான ஒஹ்ரி 100 டிகிரி ரெஸ்டாரெண்டுக்கு உணவருந்தச் சென்றுள்ளார்.  அங்கு அவருக்கு சேவைக்கட்டணம் 10% வசூலிக்கப்பட்டது,  அவர் அது பற்றி விசாரித்தபோது இது சட்டபூர்வமானது என சொல்லப்பட்டது.

விஜய் கோபால் இது குறித்து மாதாப்பூர் காவல் நிலையத்தில் செக்‌ஷன் 420 (மோசடி) மற்றும் செக்‌ஷன் 418 (தெரிந்தே மற்றவர்களை ஏமாற்றிப் பணம் பறித்தல்) கீழ் புகார் அளித்தார்.  இந்த புகார் மாவட்ட கன்ஸ்யூமர் ஃபோரம் மூலம் விசாரிக்கப்பட்டது.  ஓட்டல் நிர்வாகம் விஜயிடம் இருந்து வசூலித்த ரூ 213, மற்றும் அபராதத் தொகையாக ரூ. 5000 ஆகியவற்றை விஜய்க்கு அளிக்க வேண்டும், மற்றும் வழக்கு நடத்திய தொகையாக ரூ 5000 அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

மேலும் தீர்ப்பில் சர்வீஸ் சார்ஜ் சட்ட பூர்வமானது அல்ல, வாடிக்கையாளர்களுக்கு சேவை பிடித்திருந்தால் அவர்களாம முன்வந்து கொடுக்கலாமே தவிர அதை கேட்டு வாங்கக் கூடாது எனவும் கூறியுள்ளது.

தெலுங்கானா ஓட்டல் அசோசியேஷன் இது பற்றிக் கூறுகையில் ஐதராபாத் நகரில் அனைத்து ஓட்டல்களிலும் சர்வீஸ் சார்ஜ் வாங்கப்படுவதில்லை எனவும், ஒரு சில இடங்களில் கவனக் கோளாறு காரணமாக வாங்கி இருக்கலாம் எனவும் தெரிவித்தது.  ஆனால் விஜய் கோபால் பெரும்பாலான ஐதராபாத் ஓட்டல்களில் சர்வீஸ் சார்ஜ் வாங்கப்படுகிறது என கூறுகிறார்.

இதே போல் விஜய் கோபால் போன வருடம் ஐதராபாத் ஐனாக்ஸ் காம்ப்ளெக்சில் உள்ள திரையரங்கில் ரூ 20 விலையுள்ள தண்ணீர் பாட்டில் ரூ 59க்கு விற்கப்படுவதாகவும், பார்வையாளர்கள் தங்கள் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல தடை விதிப்பதாகவும் கூறி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஒரு வழக்கு தொடர்ந்தார்.   இந்த வழக்கில் ஃபோரம் ஐனாக்ஸ் நிர்வாகத்துக்கு ரூ ஆயிரம் அபராதமும், வழக்குச் செலவுக்காக ரூ ஆயிரம் தரவேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.  மேலும் இதுபோன்ற அதிகபட்ச விலைக்கும் அதிகமாக விற்கும் வியாபாரக் கொள்ளையை உடனடியாக ஐனாக்ஸ் நிறுவனம் நிறுத்த வேண்டும் என்றும் பார்வையாளர்களுக்கு இலவசமாக குடிநீர் கிடைக்க ஆவன செய்யவேண்டும் எனவும் தீர்ப்பில் கூறி இருந்தது.

இது போல நமது மாநிலத்திலும் பல நிகழ்வுகள் உண்டு    இங்குள்ள ஆர்வலர் யாராவது தீர்வு கொண்டு வருவார்களா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்