ஐதராபாத் ஆமை வேக ஆட்டம் – எடுத்த ரன்கள் 142 மட்டுமே!

ஷார்ஜா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே அடித்தது.

அணியின் கேப்டன் டேவிட் வார்னர், 30 பந்துகளில் அடித்த ரன்கள் 36 மட்டுமே. மனிஷ் பாண்டே 38 பந்துகளில் 51 ரன்களை அடித்தார். விருத்திமான் சஹா 31 பந்துகளில் 30 ரன்களை அடித்தார். பேர்ஸ்டோ அடித்தது 10 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே.

கொல்கத்தா அணி சார்பில், பந்துவீச்சாளர் சுனில் நரைன் மட்டும் 31 ரன்களை அதிகபட்சமாக விட்டுக்கொடுத்தார். அந்த அணியின் பவுலர்கள், பெரிதாக விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும், ரன்களை பெரியளவில் கட்டுப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.