ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்….மா.கம்யூ., பாலகிருஷ்ணன்

கடலூர்:

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘தமிழகத்தில் 3003 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட உள்ளதை, அரசு தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி கடைமடை பகுதியான கடலூர், நாகை, திருவாரூர் மாவட்ட பகுதிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்படுவதை, அரசு தடுத்து நிறுத்த வேண்டும்’’என்றார்.

கார்ட்டூன் கேலரி