ஹைட்ரோகார்பன் திட்டதிற்கு தமிழகஅரசு அனுமதி கொடுக்கவில்லை! அமைச்சர் கருப்பண்ணன்

சென்னை,

மிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டதிற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்ல என்று  அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் நிலத்திலிருந்து எடுக்கப்பட இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில்ஈ டுப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் இன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றன. தொடர்ந்து 13வது நாளாக பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதுக்கு தமிழக அரசிடம் மத்திய அரசு அனுமதி பெறவில்லை என்று கூறி உள்ளார்.

You may have missed