தொடரும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம்!

--

 

புதுக்கோட்டை:

மிழக அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டம் ர்கிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கடந்த 22 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று தமிழக அமைச்சர் விஜபாஸ்கர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ஹைட்ரோகார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அனுமதிக்காது என்று உறுதி அளித்தார். தவிர, போராட்டம் நடைபெறும் பகுதியில் பள்ளி இருப்பதால், தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தொடர்ந்து இதைவிட வலிமையாக போராட்டம் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், நல்லாண்டார் கொல்லை கிராமத்தில் 22 நாட்களாக நடந்து வந்த அறப்போராட்டக் குழுவினருடன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக நல்வாழ்வு துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் நல்லாண்டார் கொல்லை போராட்ட குழுவினர் நேற்று இரவும்  போராட்டத்தை தொடர்ந்தனர். அதேபோல் வடகாடு கிராமத்திலும் போராட்டம் தொடந்து நடந்துவருகிறது.