கொரோனாவை குணப்படுத்தும் மலேரியா மருந்து… பிரான்ஸ் ஆய்வாளர் தகவல்…

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட சிலருக்கு  மலேரியா நோய் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்ட நிலையில், அதில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

கொசுவினால் வரும் மலேரியா காய்ச்சலுக்கு பல ஆண்டுகாலமாக கொய்னா மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தது.  தற்போதைய மருத்துவ முன்னேற்றம் காரணமாக கொய்னா மாத்திரைகள் காணாமல் போயின. ஆனால், தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொய்னா மாத்திரை பலன் அளிப்பதாக கூறப்படுகிறது. இதை பிரெஞ்சு மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் செயலில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அமெரிக்கா மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்து உள்ளது. அதுபோல , பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டிடியர் ரவுல்ட் என்பவர் குளோரோகுயின் என்ற மருந்தை சில நோயாளிகளுக்குக் கொடுத்து சிகிச்சை அளித்துள்ளார். இந்த மருந்து கொரோனாவின் வீரியத்தை குறைத்து நல்ல முன்னேற்றம் அளிப்பது தெரிய வந்துள்ளது.

இவரிடம் கொரோனா பாதிப்பு 24 நோயாளிகள் தாமாக முன்வந்து சோதனை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.  அவர்களுக்கு  குளோரோகுயின் என்பது மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்து கொடுத்துள்ளார்.

குளோரோகுயின் ஏற்கெனவே சீனாவில் கொரோனா வைரஸ் கிசிக்சைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காலேத்ரா என்ற மற்றொரு மருந்து ஹெச்.ஐ.வி. சிகிச்சையில் பயன்படுவது. இதையும் மருத்துவர்கள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேரியா, வாத நிலைகள் மற்றும் பிற வியாதிகளுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் சுமார் 70 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. பிரான்சில் ஒரு மருத்துவ பரிசோதனையின் முடிவுகளை ஊக்குவித்ததைத் தொடர்ந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அதன் சாத்தியமான பயன்பாடு பலருக்கு நம்பிக்கையின் ஆதாரமாக மாறியுள்ளது.