நானும் அந்த கொடுமையை அனுபவித்தேன்: ராதிகா சரத்குமார்

திரை நட்சத்திரங்களாக வலம் வரும் பெரும்பாலான நடிகைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாக பரவலாக செய்திகள் வருகின்றன.

14 வயதில் தாம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பிரபல அமெரிக்க நடிகை ஆஸ்லே ஜுட் தெரிவித்துள்ளார். அதுபோல நடிகை அதிதி ராவ் தனக்கு 15 வயதிலேயே பாலியல் கொடுமை நடந்தது என்று சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

இந்நிலையில்  தானும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாக நடிகை ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை ரசிகர்களிடம் தங்களது அஸ்டபாவன  முகம் காட்டும் நடிகைகளின் வாழ்க்கை சோகமயமாகவே உள்ளது.

வெள்ளித்திரையில் அவர்கள் வெற்றிபெற பல்வேறு அட்ஜஸ்ட்மென்டுகளை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.  பல கொடுமைகளை அனுபவித்து  இருக்கிறார்கள்.  இந்த கொடுமை இன்று நேற்று அல்ல காலம் காலமாக அரங்கேற்றப்பட்டே வருகிறது.

தற்போது காலத்தின் மாற்றத்தால் ஒருசில நடிகைகள் தங்களது ஆரம்பகால வாழ்க்கை குறித்து வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

கடந்த  சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நடிகைகள் சிலர், சினிமாவில் ஜொலிங்க விரும்பிய  தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் பற்றி தைரியமாக தெரிவித்தார்கள்.

இதற்கு பதில் அளித்துள்ள முன்னாள் பிரபல நடிகையும், நடிகர் சரத்குமாரின் மனைவியும் தானும் இதுபோன்ற பாலியல் தொல்லைக்களுக்கு ஆளானதாக தெரிவித்து உள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், ‘மீ டூ’ என்று பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம், சினிமாவில் தானும் பாலியல் தொல்லைகளை அனுபவித்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.