தமிழக வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் வசந்தகுமார்! பிரதமர் மோடி புகழாரம்

சென்னை: கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதி எம்.பி. எச்.வசந்தகுமார், காலமானதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், “மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் அவர்களின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். வணிகம் மற்றும் சமூக சேவைகளில் அவரது முன்னேற்றம் குறிப்பிடத் தக்கது. எம்.பி.வசந்தகுமாருடன் உரையாடியதில் தமிழகத்தின் வளர்ச்சியில் அவருக்கு இருந்த அக்கறையை அறிந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

ஓம் சாந்தி”

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.