நான் நிரந்தர குடிமகன்: நடிகர் அருண்விஜய் கடிதம்

மது போதையில் காரை ஓட்டி, விபத்தை ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய், தனது ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அருண் விஜய்
அருண் விஜய்

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..

‘என் ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும்…

நான் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.  மிகப்பெரிய குற்றம் எதையும்  நான் செய்யவில்லை. நான் சுற்றுலாவுக்கோ எந்த சொந்தவேலையின் காரணமாகவோ எங்கும் செல்லவில்லை. தாங்கமுடியாத துயரத்தில் இருந்தேன்.

நான் இந்த நாட்டின் நிரந்தரமான குடிமகன். அந்த வகையில் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எதிர்கொள்வேன்.

அருண் விஜய் கடிதம்
அருண் விஜய் கடிதம்

நடந்தது என்ன என்பதை அறியாமலே, எதற்கு இந்த விஷயத்தை இத்தனை பெரிதாக்குகிறார்கள் என்பது உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை.

மேலும், என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் எனக்குப் புரியவில்லை. சூழ்நிலை எப்படியிருந்தாலும் நான் ஏதுமறியாத அப்பாவி என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து காட்டுவேன்’ என்று  அந்த கடிதத்தில் அருண்விஜய் குறிப்பிட்டிருக்கிறார்.

 

You may have missed