65-லும் 25தான்! பட்…: சரத் ஆதங்கம்

சீனியர் சிட்டிசன் ஆன என்னை மருத்துவரை சந்திக்கச் செல்லக்கூடாது என வருமானவரி அதிகாரிகள் தடுத்துவிட்டாதா நடிகர் சரத்குமார் புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் வீட்டில் இன்று காலை முதல் நடந்த வருமானவரி சோதனை இரவு முடிந்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் சரத்குமார் தெரிவித்ததாவது:
“வருமானவரி அதிகாரிகள் திடீரென வீட்டுக்கு வந்தார்கள். சோதனை நடத்த வேண்டும் என்றார்கள். நான், தாராளமாக நடத்திக்கொள்ளுங்கள் என்று வீட்டின் அனைத்து அறைகளையும் திறந்துவிட்டேன்.

அறுபத்தியைந்து வயது ஆனாலும் இருபத்தைந்து வயது இளைஞனாகத்தான் இருக்கிறேன். ஆனால், நான் ஒரு சீனியர் சிட்டிசன். இரு நாட்களாக எனக்கு உடல் நிலை சரியில்லை. ஆகவே மருத்துவரை சந்திக்கச் செல்ல வேண்டும் என்றேன்.
ஆனால் வருமானவரித்துறை அதிகாரிகள் மருத்துவரிடம் செல்ல என்னை அனஉமதிக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.