நான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்

அகமதாபாத்: தான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர் என்றும், கனவை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் டெஸ்ட்டில் 400 விக்கெட்டுகளைத் தாண்டிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.

அவர் கூறியுள்ளதாவது, “நான் எதிர்பாராத வகையில் ஒரு கிரிக்கெட் வீரராக ஆனேன். நான் ஒரு கிரிக்கெட் காதலனாக இருந்து கிரிக்கெட் வீரராக ஆனேன். நான் எனது கனவை இங்கே வாழ்ந்து கொண்டுள்ளேன். நான் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்து விளையாடுவேன் என்று ஒருபோதும் கற்பனை செய்யவில்லை.

ஒவ்வொரு முறையும் நான் விளையாடும்போதும், அணியின் வெற்றிக்கு நான் பங்களிக்கும்போது, நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாய் உணர்வேன், ஆனால், கொரோனா காலகட்டமானது நான் இந்தியாவுக்காக விளையாடுவது எவ்வளவு பெரிய அதிர்ஷடம் என்பதை மீண்டும் உணர வைத்துள்ளது.

ஐபிஎல் முடிந்த பிறகு, நான் ஆஸ்திரேலிய மண்ணில் ஆடுவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. எனவே நான் இந்த வாய்ப்பை ஒரு பரிசாகவே கருதுகிறேன். நான் விளையாட்டின் மீது செலுத்தும் காதல், எனக்கு பதிலான பாராட்டுகளைப் பெற்று தருகிறது” என்றுள்ளார் அஸ்வின்.