இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான  அப்ரிடி-க்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அப்ரிடி, தனக்காக பிரார்த்திக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நிலவும் லாக்டவுன் காரணமாக, உலகின் பெரும்பாலான தொழில்துறைகள் முடங்கிக் கிடக்க, பலரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விளையாட்டு உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்,  இங்கிலாந்து சென்று அங்கு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான அணியை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பேட்டிங்,  பந்து வீச்சு என இரு முனைகளிலும் எதிரணியை திணறடிப்பதில் வல்லரான அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள் அப்ரிடி, கடந்த வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை, என் உடல் மோசமாக வலித்தது, துரதிர்ஷ்டவசமாக நான் பரிசோதித்தேன்,  அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது., விரைவாக மீட்க எனக்கு பிரார்த்தனை தேவை, இன்சா அல்லா என்று தெரிவித்து உள்ளர்.

அப்ரிடி இதுவரை ஒரு நாள் போட்டிகளில் அவர் 395 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.  டெஸ்டில் 48ம், 20  ஓவர் போட்டிகளில் 98 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

அப்ரிடி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சக வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.