சென்னை:
கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தான் கொரோனாவில் இருந்து மீண்டு ஓய்வில் இருக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார். மருத்துவமனை நிர்வாகமும், இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சாமானிய மக்களுடன் அமைச்சர் கள், எம்எல்ஏக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 3 அமைச்சர்கள் 11 எம்எல்ஏக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக செய்திகள் பரவின.
இந்த நிலையில்,  தான், கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டேன்; தற்போது ஓய்வில் உள்ளேன் அமைச்சர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
எனது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படும் செய்திகளை நம்ப வேண்டாம். பொறியியல் கலந்தாய்வு தொடர்பாக 15ம் தேதி செய்தியாளர்களிடம் பேச உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள், கோவிட்-19ல் இருந்து நன்றாக குண மடைந்து வருகிறார். அவர் தனியறையில் உள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில்  வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்கிறோம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.