“நடிகர் கவுண்டமணியை சந்தித்ததில் மகிழ்ச்சி” – இந்திய கிரிக்கெட் வீரர்

சென்னை

சமீபத்தில் தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடிய கவுண்டமணி, கொரோனா வைரஸ் காரணமாக வெளியில் வராமல் வீட்டிலேயே தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இருந்தபோதும், அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரது பிறந்தநாளுக்கு “ஹேப்பி பர்த் டே… டே…” என்று  வாழ்த்துக்கூறி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், கவுண்டமணியை இன்று எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் தமிழகத்தை சேர்ந்த வீரர் பத்ரிநாத்.

https://twitter.com/s_badrinath/status/1268171354089459715

இதுகுறித்து பதிவிட்டிருக்கும் பத்ரிநாத் “தான் இன்று பல் மருத்துவரை பார்க்க சென்ற இடத்தில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.