அமைச்சர்களின் அதிகாரங்களில் தலையிடும் கிரண்பேடி மீது வழக்கு தொடருவேன்! புதுச்சேரி அமைச்சர்

 

புதுச்சேரி:

மைச்சர்களின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் மக்கள் நலத்திட்டங்களுக்கு இடையூறு செய்து வரும் கவர்னர் கிரண்பேடி மீது வழக்கு தொடருவேன் என்று மாநில அமைச்சர் எம்.கே.ராவ் (மல்லாடி கிருஷ்ணா ராவ்) அறிவித்து உள்ளார்.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள பாஜக ஆதரவாளரான கவர்னர் கிரண்பேடி, மாநில அரசின் நலத்திட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட வருகிறது… இதனால் அங்கு மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே லடாய் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி அமைச்சர், கவர்னர் கிரண்பேடி மீது வழக்கு தொடரப்போவதாக அறிவித்து உள்ளார். மாநிலத்தில் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடைபெற்று வருகிறது… மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். அவர்களின் அதிகாரங்களைக் குறைக்கும் நோக்கில்,  மாநிலத்தில் அமல்படுத்தி வரும் நலத்திட்டங்களுக்கு இடையூறுகளை உண்டாக்கி வருகிறார். ஏற்கனவே  யானமுக்கான பல்வேறு திட்டங்களை அவள் நிறுத்தி உள்ளார்.  இது கண்டனத்துக்குரியது.

இதன் காரணமாக கிரண்பேடி மீது வழக்கு தொடர்வது குறித்து  சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்ததாகவும், விரைவில் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப் போகிறேன் என்று புதுச்சேரி அமைச்சர்  எம்.கே.ராவ் தெரிவித்து உள்ளார்.