சுட்டுக்கொன்றாலும் சரி.. மெரினா செல்வேன்!: இயக்குநர் வ.கவுதமன் ஆவேசம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்க வேண்டும் என்று தீவிரமாக போராடிவருபவர், திரைப்பட இயக்குநர் வ.கவுதமன். அவர் தற்போது தெரிவித்திருப்பதாவது:

“மெரினா கடற்கரையில் தொடர்ந்து போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவு தர அங்கு செல்லப்போவதாக திரைப்ட இயக்குநர்  பரிசுத்தமான போராட்டத்தை கலைப்பது மனித தன்மையற்ற செயல்.

உரிமையை மறுக்கும் இந்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டுங்கள்.

கடலுக்குள் நிற்கும் எங்களின் ஒரு மாணவனுக்கு உயிரிழப்பு நேர்ந்தாலும் மீண்டும் எரிமலை போராட்டங்கள் வெடிக்கும்.

கைது செய்தாலும் சுட்டு கொன்றாலும் சரி மெரீனாவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன்.

மானமுள்ள உறவுகளே போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள்!
நாம் கேட்பது பிச்சையள்ள காலம்காலமாக மறுக்கப்பட்ட நம் உரிமை!
போராட்டத்தை கூர்மைப்படுத்துங்கள்” என்று வ.கவுதமன் தெரிவித்துள்ளார்.