பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது!:  இளையராஜா.  

த்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்ற  இளையராஜா தெரிவித்துள்ளார்.

நாளை குடியரசு தினத்தையொட்டி, 2018ம் ஆண்டுக்கான   பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டள்ளது.

எம்.ஆர்.ராஜகோபால், நாகசாமி, ஞானம்மாள், தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் வாசுதேவன் ஆகியோர் பத்ம விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இளையராஜா, “பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை; தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி