நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! மத்தியஅரசு அறிவிப்பு

டில்லி:

டிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடக்க உள்ளது. இந்த விழாவின்போது,  இந்த விருது ரஜினிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினி சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக பிரகாஷ் ஜவடேக்கர் அறிவித்துள்ளார். கடந்த பல தசாப்தங்களாக இந்திய சினிமாவுக்கு அவர் செய்த சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக Icon of Golden Jubliee என்ற பெயரில் ரஜினிக்கு, சினிமா துறைக்கான சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Icon of Golden Jubliee, Icon of Golden Jubliee award, IFFIGoa50, Prakash Javadekar, Rajni, Rajnikanth
-=-