நான் கமல் ரசிகன்: சொல்கிறார் ஸ்ருதி ஹீரோ

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் தேசிய விருது பெற்றவர். இவர்  ஸ்ருதி ஹாஸனுடன் ஜோடியாக  நடித்த பெஹன் ஹோகி தேரி இந்தி படம்  வெளியாகி உள்ளது.

படத்தை பார்த்தவர்கள் ராஜ்குமார் மற்றும் ஸ்ருதியை புகழ்ந்து தள்ளுகிறார்கள். “இருவருமே அற்புதமாக நடித்திருக்கிறார்கள்” என்று பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்கள்.

இந்த நிலையில் மீடியாவை சந்தித்த ராஜ்குமார் தெரிவித்திருப்பதாவது:

ராஜ்குமார்

“கமல்ஹாசன் சார் ஒரு லெஜண்ட்.  பலருக்கும் அவர்  இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார்.  அவரது பல படங்களை நான் ரசித்து பார்த்திருக்கிறேன்.  அவரின் நடிப்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன்.  அதிலும் குறிப்பாக அப்பு ராஜாவில் (அபூர்வ சகோதரர்கள்) அவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்
கமல் சாரை சந்தித்து சினிமா பற்றி நிறைய பேச வேண்டும் என்று ஸ்ருதியிடம் கூறினேன். அவரும் சந்திக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்” என்று கமலைப் புகழந்த ராஜ்குமார், “ஸ்ருதி ஒரு அருமையான பெண். திரையில்  மட்டுமல்ல நேரிலும் அவர் மிக அழகாக உள்ளார். தனது பணியில் மிகவும் அக்கறை உள்ளவர் ஸ்ருதி” என்று புகழ்ந்திருக்கிறார் ராஜ்குமார்.

.