சென்னை : டிகை குஷ்பு,  இன்று பாஜகவில் இணையப்போவதாக  செய்திகள் வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்பு நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியாகாந்திக்கு குஷ்பு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாக இருந்து வந்த நடிகை குஷ்பூ, சமீப காலமாக, பாஜகவை புகழ்ந்து பேசி வந்தார். இதனால், அவர் பாஜகவுக்கு தாவலாம் என தகவல்கள் பரவி வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சனிக்கிழமை, காவி கலர் உடையுடன் மாற்றம் தவிர்க்க முடியாதது என டிவிட் பதிவிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் நேற்று அவர் திடீரென தனது கணவர் சுந்தருடன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.  இதையடுத்து, அவர் பாஜகவில் ஐக்கியமாவது உறுதியானது.

குஷ்பூ, டெல்லியில் ஜேபி நட்டா முன்னிலையில்  இன்று மதியம்  1 மணிக்கு  பாஜகவில் இணைவது உறுதியாகி உள்ளது.

இந்தி நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்பு நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை இன்று அறிவித்தது.

அதைத்தொடர்ந்து, தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்திக்கு குஷ்பு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், 2014 தேர்தலில் தோற்று பின்னடைவில் இருந்த போது காங்கிரசில் என்னை இணைத்துக் கொண்டேன். ஆனால், பதவி, பணம், புகழ் போன்ற காரணங்களுக்காக நான் காங்கிரசில் இணையவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி மேலிடத்தில் இருக்கும் சிலருக்கு மக்களுடன், தொண்டர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் உள்ளனர், காங்கிரசுக்காக உண்மையாக உழைக்கும் என்னைப் போன்றவர்களை மேலிடத்தில் சிலர் ஒடுக்க நினைக்கிறார்கள்.

இதனால்,  நீண்ட காலமாக யோசித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன், தனக்கு  கட்சியில் வாய்ப்பு அளித்த சோனியா, ராகுல் காந்திக்கு குஷ்பு நன்றி என எழுதி உள்ளார்.