நான் மலையாளி… ! கமல்ஹாசன் கடிதத்தால் பரபரப்பு!!

--

சென்னை:

நான் ஒரு மலையாளி; பினராயி விஜயன் என்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் என்று நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் அரசின் உயரிய ‘செவாலியே’ விருதை தமிழில் சிவாஜிக்குப் பிறகு கமல்ஹாசன் வாங்கியுள்ளார். இதற்காக ஒட்டுமொத்த திரை உலகமும் அவரை கொண்டாடி வருகிறது.
அதே நேரத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து சொல்லாது திரையுலகை சேர்ந்த்வர்களுக்கு  வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
கமலுக்கு  ஏன் வாழ்த்துச் சொல்லவில்லை என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கமலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

k 2 k 1

அதில், உங்களுக்குத் தகுதியான விருது செவாலியே. இந்திய சினிமாவை உலகத் தரத்துக்குக் கொண்டு போனதற்குச் சாட்சி நீங்கள் என புகழாரம் சூட்டியிருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் அனுப்பியுள்ள கடிதத்தில், – உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!

வேற்று மாநிலத்து முதல்வர் உங்கள் சாதனைகளை மனம் திறந்து உண்மையாகப் பாராட்டுவது எவ்வளவு அழகு என்பதாகச் சிலர் சொல்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். – இதில் எனக்கு மாற்றுக் கருத்தொன்று உண்டு என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். – பினராயி விஜயன், வேற்று மாநில முதல்வர் அல்ல; அவர் என் மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர். – நீங்கள் மலையாள சினிமா பார்க்கும் எந்த ஒரு மலையாளியையும் கேட்டுப் பாருங்கள்.. கமல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று?
இவ்வாறு கமல்ஹாசன் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.