நான் பீட்டா அல்ல!  ஜல்லிக்கட்டை ஆதிரிக்கிறேன்!: சௌந்தர்யா ரஜினி

--

ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்த்து நடிகர் ரஜினியின் மகள் சொந்தர்யா  குரல் கொடுப்பதாக பலமுறை செய்திகள் வந்திருக்கின்றன. அவரும் அதை மறுத்ததில்லை. சமீபத்தில் அவர் விலங்குகள் நல வாரிய விளம்பர தூதராகவும் நியமிக்கப்பட்டார்.

அதே நேரம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. அரசியல் தலைவர்களும், நடிகர்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல்கொடுக்க ஆரம்பித்தார்கள். மவுனமாக இருந்த ரஜினியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசினார்.

இந்த நிலையில் அவரது குடும்பத்தில் இருந்து அடுத்து சௌந்தர்யா ரஜினி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

\“நான் பீட்டா அமைப்பில் உறுப்பினர் அல்ல. நான் ஜல்லிக்கட்டை ஆதிரிக்கிறேன்” என்று ட்விட் செய்துள்ளார்.