எனக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழிசை சவுந்தரராஜன்

தராபாத்

தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

 

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஐதராபாத் பகுதியில் அதிக அளவில் பாதிப்புக்கள் உள்ளன.

ஐதராபாத் மக்களவை தொகுதி உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி தாமே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டார்.

அவ்வகையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொரோனா பரிசோதனை குறித்து வலியுறுத்தி உள்ளார்.

ஆரம்பத்திலேயே கொரோனா தொற்றை கண்டுபிடித்தால் நம்மையும் பிறரையும் காக்கலாம் என டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்

மேலும்  தமக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி