Random image

பாஜக அரசின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் :சந்திரபாபு நாயுடு

தராபாத்

த்திய பாஜக அரசின் வருமான வரித்துறை மற்றும் சிபிஐ மூலமாக வரும் மிரட்டலுக்கு தாம் பயப்படவில்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.   அன்றுமுதல் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் பகை நிலவி வருகிறது.    பாராளுமன்ற அவைக் கூட்டத்தை போராட்டத்தின் மூலம் முழுமையாக தெலுங்கு தேசம் கட்சி முடக்கியது.    அது முதல் பாஜக அரசு சிபிஐ மற்றும் வருமானவரி சோதனைகளை தெலுங்கு தேச கட்சி தலைவர்களிடம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானா மாநில தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று ஐதராபாத்தில் நடந்தது.   கூட்டத்தின் பின்னர் நடந்த மாநாட்டில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ”ஐதராபாத் நகரை உலகப் புகழ் பெற வைத்த பெருமை தெலுங்கு தேசம் கட்சிக்கு உள்ளது.   மாநில பிரிவினையின் போது  மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இழுக்கடித்து வருகிறது.

இதை தட்டிக் கேட்ட தெலுங்கு தேசம் கட்சிக்கு பாஜக அரசு சிபிஐ மற்றும் வருமானவரித்துறை மூலமாக மிரட்டல் அளித்து வருகிறது.  இந்த மிரட்டலுக்கு நான் என்றும் பயப்பட மாட்டேன்.   அதிகாரமும் ஆட்சியும் என்றும் நிரந்தரம் அல்ல என்பதை பாஜக உணர வேண்டும்.

தமிழகம், மற்றும் கர்நாடகாவில் மத்திய அரசின் செயல்பாடு தவறான வழி ஆகும்.   தங்களுக்கு ஆதரவு இல்லாத மாநிலங்களில் பிரச்னையை உண்டாக்கும் போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும்” என பேசினார்.