நான் குரங்குக்கு பிறந்தவன் இல்லை : மத்திய அமைச்சர்

டில்லி

தாம் குரங்குடைய மகன் இல்லை என மத்திய அமைச்சர் சத்யபால் சிங் டார்வின் தத்துவம் பற்றி தெரிவித்துள்ளார்.

பிரபல விஞ்ஞானி டார்வினின் பரிணாம வளர்ச்சித்  தத்துவப்படி மனிதர்கள் அனைவரும் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என்பதாகும்.   இதை பலக் கல்வியாளர்களும் அறிஞர்களும் உலகளாவில் ஒப்புக் கொண்டுள்ளனர்.   ஆனால் இதற்கு பாஜகவை சேர்ந்த பலரும் எதிர்ப்புத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் ஒருவர் ஆவார்.   இவர் எற்கனவே இது குறித்து இந்தப் பாடங்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறியதால்  சர்ச்சை உண்டானது.    இவரது துறையைச் சேர்ந்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குறுக்கிட்டு இவரை அது போல பேச வேண்டாம் என அறிவுற்த்தினார்.

அதற்குப் பின் அவ்வாறு பேசுவதை நிறுத்திக் கொண்ட சத்யபால் சிங் நேற்று ”டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துவம் தவறானது.  நான் குரங்குக்கு பிறந்தவன் இல்லை.  நானும் விஞ்ஞானம் படித்து ரசாயனத்தில் டாக்டர் பட்டம் பெற்றவன்.   என்னைப் பற்றி தவறாக பேசுபவர்களை விட எனக்கு கல்வி அறிவு அதிகம்.

நான் இந்த பத்திரிகைகளைக் கண்டு பயப்படுகிறேன்.   அவர்கள் என் பேச்சுக்களை திருத்தி வெளியிடுகின்றனர்.   நான் கூறும் உண்மைகள் மாற்றப்படுகின்றன.   இன்று அதை எதிர்ப்பவர்கள் விரைவில் தாம் குரங்குகளின் குழந்தைகள் இல்லை என்பதை ஒப்புக் கொள்வார்கள்.

பாடத்திட்டத்தை விரைவில் மாற்றி அமைக்கப் போகிறோம்.   நமது குழந்தைகள்  தங்களுடைய தந்தைகளை உபயோகமற்றவர்கள் என நினைக்கும் ப் அடி பாடப் புத்தகங்கள் அமைந்துள்ளன.    அந்த குழந்தைகளுக்கு தங்கள் மூதாதையர்களும் மனிதர்களே, குரங்குகள் அல்ல என்பதை உணர வைக்க வேண்டும்” என கூறி உள்ளார்.