பல கதாநாயகர்களுடன் நடிக்கும் போது அசவுகரியமாக உணர்ந்தேன் : ஜோதிகா

சென்னை

மூன்று கதாநாயகர்களை தவிர மற்றவர்களுடன் நடிக்கும் போது அசவுகரியமாக உணர்ந்ததாக நடிகை ஜோதிகா கூறி உள்ளார்.

தமிழில் புகழ் பெற்ற நடிகயான ஜோதிகா நடிகர் சூர்யாவை மணந்த பிறகு நடிப்பை நிறுத்தி விட்டார். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் கணவர் சூர்யா தயாரிப்பில் 36 வயதினிலே என்னும் படத்தின் மூலம் மீண்டும் திரையுலக வாழ்வை ஆரம்பித்தார். பெண்களை மையமாகக் கொண்ட கதைகளில் மட்டுமே கவனம் செலுத்தும் ஜோதிகாவின் அடுத்த படம் காற்றின் மொழி.

துமாரி சுலு என்னும் இந்தித் திரைப்படத்தின் தமிழ இதில் விதார்த் உடன் ஜோடியாக நடித்துள்ளார். ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் அறிமுக விழாவில் நடிகை ஜோதிகா கலந்துக் கொண்டு பேசினார்,

 

ஜோதிகா தனது பேச்சில், “ஒரு நடிகையாக நான் மூன்று நடிகர்களுடன் நடிக்கும் போது மட்டுமே சவுகரியமாக உணர்ந்தேன்.

 

அவர்கள் சூர்யா, மாதவன் மற்றும் அஜித் ஆவார்கள். மற்றவர்களுடன் நடிக்கும் போது மிகவும் அசவுகரியமாக உணர்வேன். அதர்குப் பிறகு இந்தப் படத்தில் நான் விதார்த் உடன் நடிக்கும் போது சவுகரியமாக உணர்ந்துள்ளேன்.

காற்றின் மொழி படம் எனது மனதை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தில் நான் முதல் முறையாக பாடி இருக்கிறேன். எனக்கும் இயக்குனர் ராதா மோகனுக்கும் நல்ல புரிதல் உண்டு மொழி திரைப்படத்துக்கு பிறகு 11 வருடம் கழித்து மீண்டும் இணைந்திருக்கிறோம். இந்த படத்தில் நடிக்க நான் மிகவும் மகிழ்ந்தேன்.” என தெரிவித்துள்ளார்.