‘நான் அவன் இல்லை’: அதிமுக பிரமுகர் ‘பார்’ நாகராஜ் தன்னிலை விளக்கம் ‘வீடியோ’

கோவை:

நெஞ்சை பதற வைக்கும் பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு கொடுத்த இளம்பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில், ஒரேநாளில் ஜாமினில் வெளிவந்த பார் நாகராஜ், வீடியோவில் வெளியான நபர் நான் அல்ல என்று மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

பொள்ளாச்சி நகர அதிமுக அம்மா பேரவை செயலாளர், பார் நாகராஜ். இவர்மீது ஏற்கனவே பல அடிதடி, மிரட்டல் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை, வீடியோ தொடர்பாக  புகார்  கொடுத்தவரின் சகோதரரை மிரட்டியதாக, கைது செய்யப்பட்டு ஒரேநாளில் ஜாமினில் விடுதலையான மாபெரும் புள்ளி.

சமீபத்தில் வெளியான பொள்ளாச்சி பாலியல் தொடர்பான மற்றொரு வீடியோவில், பார் நாகராஜ் ஒரு இளம்பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாகராஜ் தலைமறைவானதாகவும் தகவல் பரவியது.

இந்த நிலையில், அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று மறுப்பு தெரிவித்து பார் நாகராஜ் புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், பொள்ளாச்சி சரகத்தில் நடைபெற்ற அடிதடி வழக்குகளில் நான் கைது செய்யப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளவர், தற்போது அனைத்து தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் எனது புகைப்படத்தை வெளியிட்டு, அந்த வீடியோவில் இருப்பது நான்  என்று அறிவித்து வருகிறீர்கள்.. அந்த வீடியோவில் இருந்தது  நான் அல்ல… அது தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 பேரில் ஒருவரான சதீஷ் என்பவரின் படம் என்று தெரிவித்துள்ளார். தவறான படத்தை வெளியிட்டு உள்ளீர்கள்… இதன் காரணமாக எனது குடும்பத்தினரே என்னை ஒதுக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இந்த விவகாரத்தை நான் சட்டரீதியாக சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் பேசும் வீடியோ..