நான் பிக் பாஸ் 2 வில் பங்கேற்கவில்லை : நடிகை சிநேகா

கடந்த வருடம் விஜய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது.   இதில் ஆரவ் வெற்றி பெற்று ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையைப் பெற்றார்.    இந்நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமலஹாசன் சிறிய திரையில் தனது முதல் இன்னிங்சை தொடங்கினார்.

தற்போது பிக் பாஸ் 2 வரும் ஜூன் 17 முதல் நடைபெற உள்ளது.   இதையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார்.    இந் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளப் போகும் பிரபலங்கள் குறித்து பல செய்திகள் அதிகார பூர்வமற்று வெளியாகி வருகின்றன.

அவ்வகையில் நடிகை சிநேகா இந்நிகழ்வில் பங்கு கொள்வதாக செய்தி வந்தது.  இதை மறுத்த சிநேகா தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை.  இது ஒரு ஆதாரமற்ற வதந்தியாகும்.  நான் இப்போதுள்ள இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.  இவ்வாறு செய்தி பதியும் முன்பு ஊடகங்கள் என்னையும் கேட்டு இருக்கலாம்”  என பதிந்துள்ளார்.

You may have missed