சென்னை

சென்னை மாநகராட்சி கமலஹாசன் வீட்டு வாசலில் தனிமைப்படுத்தல் ஸ்டிக்க்ரை ஒட்டியதால் குழப்பம் ஏற்பட்டு இப்போது ஸ்டிக்கர் அகற்றப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடு சென்று திரும்புவோர் வீடுகளில் சென்னை மாநகராட்சி அந்த வீடுகளில் வசிப்போர் தனிமையில் உள்ளதாக முகவரியுடன் ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்.  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் வீட்டில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.  அதில் அந்த வீட்டில் உள்ளோர் மார்ச் 10 முதல்  ஏப்ரல் 4 வரை தனிமை படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டது.

இது பல செய்தி சேனல்களில் ஒளிப்ரப்பபட்டு பரபரப்பானது.  இதையொட்டி இன்று கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது வீட்டில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் காரணமாக நான் தனிமைப்படுத்தப்பட்டுளதாக் தகவல்கள் பரவின.  நான் கடந்த சில வருடங்களாக மக்கள் நீதி மய்யம் இங்கு வசிப்பதில்லை என்பதையும் இது எனது கட்சி அலுவலகம் என்பதையும் அனைவரும் அறிவார்கள்.  நான் தனிமைப்படுத்தப் படவில்லை.

நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை வீட்டிலும் வெளியிலும் பின்பற்றி வருகிறேன். நான் சமூக இடைவெளியை எங்கும் பின்பற்றுவேன் எனச் சொல்லிக் கொள்கிறேன்.  செய்தி ஊடகங்கள் எந்த ஒரு செய்தியையும் வெளியுய்ட்ன் முன்பு அது உண்மையா அல்லது பொய்யா எனத் தெரிந்து பதிவிட்டால் தவறான செய்தி பரவுவதை தடுக்க முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “நடிகை கவுதமி சமீபத்தில் துபாயில் இருந்து திரும்பி வந்துள்ளார். அவருடைய பாஸ்போர்ட்டில் கமலஹாசன் வீட்டு முகவரி இருந்தது.  எனவே கமல் வீட்டில் எங்கள் ஊழியர் இந்த ஸ்டிக்கரை ஒட்டி உள்ளார். தற்போது அந்த ஸ்டிக்கர் அகற்றப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை கவுதமி நடிகர் கமலஹாச\ன்  இருவரும் கடந்த 2018 வரை ஒன்றாக வசித்து வந்தனர்.   அப்போது கமலை விட்டுப் பிரிந்த கவுதமி தனது பாஸ்போர்ட்டில் சமீபத்திய முகவரியை மாற்றாததால் இந்த குழப்பம் நேர்ந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.