புதுவை:

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தாம் ரப்பர் ஸ்டாம்ப் போல செயல்பட முடியாது என தெரிவித்துள்ளார்.

புதுவை யூனியன் பிரதேசத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளது.  அதிகாரிகள் நியமனம் நீக்கம் போன்றவற்றிலும் இதர அரசு நிர்வாக பணிகளிலும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னை, கிரண்பேடி பொருட்படுத்துவதே இல்லை என்று நாராயணசாமி தனது வருத்தத்தைத் தெரிவித்தார். இவர் மட்டுமின்றி அமைச்சரவையில் உள்ளவர்களும், பிற கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில், கிரன்பேடி, தன் மீது கூறப்படும் விமர்சனங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு விளக்கம் அளித்து கடிதம் எழுதியிருக்கிறார்.

மேலும், “துணை நிலை ஆளுநருக்கு உள்ள அதிகாரப்படியே நான் செயல்படுகிறேன். எந்தவித செயல்பாடும் இன்றி ரப்பர் ஸ்டாம்ப் போல என்னால் இருக்கமுடியாது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கிரன்படேி பதிவிட்டுள்ளார்.

ஆக, கிரன்பேடிக்கும் – முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்குமான மோதம்போக்கு தொடரும் என்றே தோன்றுகிறது.